பாரத நாடு பழம் பெரும் நாடு
பாரதம்
இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணிய பாரதியின் பாடல்கள் பல இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்தன. அவரது பாடல்களில் இன்றும் மக்கள் நினைவில் நிற்பது “பாரத நாடு பழம் பெரும் நாடு, நீரதன் புதல்வர் இன்நினைவகற்றாதீர்” என்ற வரிகள். வடக்கே இமயம் தொட்டு தெற்கே குமரிக் கடல் வரை நீண்டது பரத கண்டம் என்பது காலம் காலமாக இந்நாட்டு மக்கள் அனைவரும் உணர்வு பூர்வமாக அறிந்த ஒன்று. நம் நாட்டு தரிசனங்களில் பாரதத்தின் பெயர்க்காரணம் பலவாறாகக் கூறப்பட்டாலும் ஜைன தர்ம நோக்கில் “பாரதம்” பெயர் பற்றிய சான்றுகளை இங்கு காண்போம்.
ஜைன அறம்
“என்றும் உளதாகி இறைவனால் வெளிப்பட்டது அறம்” என்று பழம் பெரும் தமிழ் ஜைன நூலான அருங்கலச்செப்பு சுட்டும் அன்பு நெறியாகிய ஜைனம், சனாதனம் எனப்படும் எப்போதும் உள்ள அறவழியாகும். உத்சர்ப்பிணி, அவசர்ப்பிணி எனப்படும், “சிறப்புகள்” பொங்கும் காலம், மங்கும் காலம் என்ற காலச் சுழற்சிகளில் தழைத்தோங்கியும், அறம் குன்றியும் பின்னர் தீர்த்தங்கரர்களால் மீண்டும் நிலை நிறுத்தப்படுவதாகவும் உள்ளது ஜைன அறம்.
மெய்ப்பொருளானது தீர்த்தங்-கரர்களின் முழுதுணர் ஞானத்தால் அறியப்பட்டு அவர்களின் பிரதம சீடர்களாகிய கணதரர்களால் மக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. உயிர் (ஜீவன்), உயிரல்லாதவை (அஜீவன்), புண்ணியம், பாபம், ஊற்று (ஆஸ்ரவம்), செறிப்பு (சம்வரை), உதிர்ப்பு (நிர்ஜரை), கட்டு (பந்தம்), வீடு (மோக்ஷம்) ஆகிய ஒன்பதும் மெய்ப்பொருட்கள் (நவ பதார்த்தங்கள்) ஆகும்.
மேலும், உயிர், புத்கலம், தர்மம், அதர்மம், ஆகாயம், காலம் என்னும் ஆறு திரவியங்களாகவும் மெய்பொருள் அறியப்படுகிறது. காலம் தவிர மற்ற ஐந்து பொருள்களும் அத்திகாயங்கள் ஆகும். காலம் இடப்பரப்பு இன்மையால் அத்திகாயங்களில் சேர்க்கப்படவில்லை. காலத் திரவியம் என்றே அழைக்கப்-படுகிறது. இந்த ஆறு திரவியங்களும் உலகெங்கும் நிறைந்து காணப்படுகின்றன. ஆகாயஸ்திகாயத்தில் இப்பொருள்கள் காணப்படும் பகுதி லோகம் என்றும் இவை இல்லாத பகுதி அலோகம் என்றும் அழைக்கப்படுகின்றன.
மத்திய லோகம்
மேற்கூறியபடி திரவியங்கள் நிறைந்து காணப்படும் லோகம்; மூன்று பிரிவுகளாக, அதாவது கீழுலகம், மத்திய லோகம் மற்றும் மேலுலகம் என அமைந்துள்ளது. இந்த மூன்று உலகங்களின் அமைப்பையும் ஜைன ஆகமங்கள் வழியாக அறியலாம். மத்திய லோகத்தில் தான் நாம் வாழும் உலகம் அமைந்துள்ளது. மத்திய லோகத்தின் அமைப்பை தத்துவார்த்த சூத்திரம், ஜம்புத்வீப ப்ரஜ்ஞசப்தி போன்ற நூல்களில் ஆசாரியர்கள் விளக்கியுள்ளனர்.
(இந்த நடு உலகில்) ஜம்பூத்வீபம் முதலிய நல்ல பெயர்களை உடைய தீவுகளும், லவண ஸமுத்திரம் முதலிய சமுத்திரங்களும் உள்ளன.தீவு, சமுத்திரங்கள் தமக்கு முந்தைய தீவு சமுத்திரங்களை வளைத்துக் கொண்டிருப்பனவாகவும், இரு மடங்கு அகலம் அதிகமானதாகவும், வளையல் போல் வட்ட வடிவமாகவும் உள்ளன. அந்த த்வீப-சமுத்திரங்களின் மத்தியில் வட்ட வடிவமாகவும் ஒரு இலட்சம் விஸ்தீரமமுடைய ஜம்பூத்வீபம் உள்ளது. நாவல் மரங்கள் நிறைந்த பூமியாகையால் தமிழில் நாவலந்தீவு எனவும் வட மொழியில் ஜம்பு த்விபம் எனவும் அழைக்கப்படுகிறது. ஜம்பு என்பது நாவல் மரம் ஆகும். எனவே ஜம்புத் தீவினை நாவலந் தீவு என தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்புத்வீபத்தின் அமைப்பை தத்துவார்த்த சூத்திரம் பின் வருமாறு குறிப்பிடுகிறது. ॥தத்துவார்த்த சூத்திரம். அ.3.சூ.9 முதல் 11 வரை॥
தன்மத்யே மேருநாபிர்வ்ருத்தோ யோஜனசதஸஹஸ்ரவிஷ்கம்போ ஜம்பூத்வீப: ॥9॥
பொருள்: அந்த த்வீப-சமுத்திரங்களின் மத்தியில் வட்ட வடிவமாகவும் ஒரு இலட்சம் விஸ்தீரணமுடைய ஜம்பூத்வீபம் உள்ளது. அதன் நடுவில் மேருமலை நாபியைப் போன்றுள்ளது.
பரதஹைமவதஹரிவிதேஹரம்யகஹைரண்யவதைராவதவர்ஷா: க்ஷேத்ராணி । ॥10॥
பொருள்: பரத வர்ஷம், ஹைமவத வர்ஷம், ஹரி வர்ஷம், விதேஹ வர்ஷம், ரம்யக வர்ஷம், ஹைரண்யக வர்ஷம், ஐராவத வர்ஷம் என ஏழு க்ஷேத்திரங்கள் உள்ளன.
தத்விபாஜின: தத்விபாஜின: பூர்வாபராயதா ஹிமவன்மஹாஹிமவன்நிஷதநீலருக்மி-
சிகரிணோ வர்ஷதாரபர்வதா: ॥11॥
பொருள்: அதன் நடுவில் மேருமலை நாபியைப் போன்றுள்ளது. பரத வர்ஷம், ஹைமவத வர்ஷம், ஹரி வர்ஷம், விதேஹ வர்ஷம், ரம்யக வர்ஷம், ஹைரண்யக வர்ஷம், ஐராவத வர்ஷம் என ஏழு க்ஷேத்திரங்கள் உள்ளன.
தமிழ் இலக்கியங்களில் ஜம்புத்வீபம் (நாவலந்தீவு) மற்றும் பரத கண்டம்
சிலப்பதிகாரம், ஆய்சியர் குரவையில் இளங்கோவடிகள், “கயலெழுதிய இமய நெற்றியின் அயலெழுதிய புலியும் வில்லும் நாவலந் தண்பொழில் மன்னர் ஏவல் கேட்பப் பார் அர சாண்ட மாலை வெண்குடைப் பாண்டியன்” என பாண்டிய மன்னனின் இமயம் முதல் குமரி வரையான வெற்றிகளைக் குறிப்பிடுகிறார்.
மணிமேகலை பதிகப் பாடலில் “பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய, கோடாச் செங்கோல் சோழர் தம் குலக்-கொடி” என பரத கண்டத்தில் சோழர்களின் செங்கோல் ஆட்சி சிறப்பிக்கப்படுகிறது.
சூளாமணி காதைகளில் (389-391), உலகின் நடுவே அமைந்துள்ள மந்தர மேரு மலை, அதில் உள்ள அழகிய வேதிகை, நடுவிடத்திலே அமையப்பெற்ற நாவல் மரம், இரு கூறுகுகளாய் அமைந்துள்ள உலகம், அதில் உள்ள ஏழு மலைகள், ஏழு கண்டங்கள், ஏழு பெரும் ஆறுகள் மற்றும் ஏழு கடல்கள் அகியவை சொல்லப்-பட்டுள்ளன. கால ஏற்ற தாழ்வு கொண்ட இரு கண்டங்ககளில், தென் திசையில் உள்ளது பரத கண்டம் என சூளாமணி சொல்கிறது.
கொங்குவேளிர் இயற்றிய பெருங்-கதையில் (கா.2 பா.3, வ.91-95, நல்நிலை உலகினுள் நாவல் போலவும் பொன் அணி நெடுமலை போலவும் ...) மணமக்களை “மேரு மலையும் நாவலும் போல் வாழ்க” என வாழ்த்துவது காண்கிறோம்.
யசோதர காவியம், முதற் சருக்கம், நாட்டுச் சிறப்பில், “பைம்பொன் னாவற் பொழிற்பர தத்திடை” என நாவலந்தீவின் தென் பகுதியில் உள்ள பரதம் என இயம்புகிறது.
பாரதம், பெயர்க்காரணம்
இந்திய வைதிக சமயங்கள் பகவான் விருஷபதேவரைப் பற்றி புராணங்களில் குறிப்பிடுகையில் பரத கண்டத்தின் பெயர் காரணத்தை தெரிவிக்கின்றன.
விஷ்ணுபுராணம்
ரிஷபாத் பரதோ ஜாஞே ஜ்யேஷ்ட: புத்ர: சதாக்ரஜ: ।
ததஸ்ச பாரதம் வர்ஷமேதல்லோகேஷு கீயதே ॥
பொருள்: ரிஷபதேவரின் நூறு புதல்வர்களில் முதல்வனானவன் பரதன். அவன் காலம் முதல் இந்த பூமி பாரதம் என அழைக்கப்படுகிறது.
பாகவத புராணம் (பாகம் 5, அத்தியாயம் 5)
பகவான் ரிஷபதேவ: உபசமசீலானாம் உபரதகர்மணாம் மஹாமுனீனாம் பக்திஞானவைராக்ய-லக்ஷணம் பரமஹம்ஸதர்மம் உபசிக்ஷமாண: ।
ஸ்வதனயஜ்யேஷ்டம் பரதம் தரணிபாலனாய அபிசிஷிச்ய ஸ்வயம் உர்வரிதசரீரமாத்ரபரிக்ரஹ: ப்ரவரவ்ரஜ ॥
பொருள்: பகவான் ரிஷபதேவர் தன் தலைமகன் பரதனை, யார் தர்மத்தை நன்கு அறிந்தவனோ, தவ துறவியர் பால் பக்தி உடையவனோ, யாரிடம் பக்தி மற்றும் துறவு பற்றிய இலக்கணங்கள் காணப்படுகிறதோ, அந்த பரதனை அரியணையில் அமரச்செய்து தான் துறவு பூண்டார்.
ஆனால், பின்னாளில் வந்த துஷ்யந்தன் சகுந்தலையின் மைந்தன், பரதனின் பெயரால் பாரதம் என அழைக்கப்படுகிறது என்பது மேற்கண்ட புராணங்களில் கூறப்பட்டுள்ளதற்கு மாறானது.
ஸ்ரீபுராணம்
ஸ்ரீபுராணம் இருபத்து நான்கு தீர்த்தங்-கரர்களைப் பற்றிய வரலாற்று நூல். ஸ்ரீஜினசேனாச்சாரியார், ஸ்ரீ குணபத்ராச்-சாரியார் ஆகிய இரு முனிவர்கள் இயற்றிய மகாபுராணம் என்னும் வடமொழி காப்பியத்தின் தமிழ் உரைநடை நூல். இதில், நாபி மன்னனும் முதலாம் தீர்த்தங்கரருமான ஆதிபகவன் இவ்வுலகம் போகபூமியாக இருந்து கர்மபூமியாக மாறிய சமயம் பயிரிடாமல் முன்பு தாமே விளைந்த தானியங்கள், மரங்கள் முதலியன விளையா-மையால் பசியுற்ற மக்கள் ஆதிதேவனிடம் முறையிட, அதைக் கேட்ட பகவான் அவர்கள் வருத்தம் தீர்க்கும் வழியை தமது அவதி ஞானத்தால் கண்டு, “விதேக க்ஷேத்திரத்தைப் போல பரத க்ஷேத்திரத்-திலும் கிராமம், வீடு முதலியவற்றையும், அறுவகை கருமங்களையும் செய்து கொடுப்போம்” எனக் கூறினார்.
பகவானின் எண்ணம் அறிந்த தேவேந்திரன் அயோத்தி நகரில் மாட மாளிகைகள், மதில்கள், கோபுரங்கள், ஆழ்ந்த அகழிகள், உயர்ந்த உப்பரிகைகள் போன்ற கட்டடங்களை அமைத்து அயோத்தி மாநகரை அழகு பெறச்செய்தான். மேலும் அந்த அயோத்தி நகரைச் சேர்ந்த பூமியைக் கௌசலை, அவந்தி, பௌண்டிரகம், அசுமகம், ரம்மியகம், குரு, காசி, கலிங்கம், அங்கம், வங்கம், சிங்கம், சமுத்திரகம், காஷ்மீரகம், உசீநரம், ஆநர்த்தம், வத்ஸம், பாஞ்சாலம், மாளவம், தசார்ணம், கச்சம், மகதம், விதர்ப்பம், குருஜாங்கலம், கரஹடம், மகாராஷ்ட்ரம், சுராஷ்ட்ரம், ஆபீரம், கொங்கணம், வனவாசி, ஆந்திரம், கர்நாடகம், கோசலம், சோழம், பாண்டியம், கேரளம், தார்வாபிசாரம், விதேகம், சிந்து, காந்தாரம், யவனம், சேதி, பல்லவம், காம்போஜம், அரட்டம், பாகுலீகம், துருஷ்கம், சகம், கேகயம் முதலிய நாடுகளைப் படைத்தான். இந்நாடுகளின் சுற்றுப்புறத்தை வேடர், இருளர் முதலான காடுவாழ் மக்களுக்கு உரிய இடமாகச் செய்து கொடுத்தான். இந்நாடுகளுக்கு தலைநகரங்களையும், கிராமம், புரம், கேடம், கர்வடம், மடம்பம், பத்தனம், துரோணமுகம், சம்வாகம் முதலான குடியிருப்புகளையும் செய்து கொடுத்தான். இவ்வாறு புரங்களை வேறு வேறாக வகுத்தமையால் தேவேந்திரன் புரந்தரன் எனப் பெயர் பெற்றான்.
பின்னர் பகவான் மக்களுக்கு உழவு, தொழில், எழுத்து, வாணிபம், கல்வி, சிற்பம் என்னும் அறுவகை கருமங்களை உபதேசித்தார். மேலும் உறவு முறைகள், திருமண வகைகளையும் வகுத்துக் கொடுத்தார். இவ்வாறு “க்ருதம்” (செய்யப்பட்டது) ஆதாலால், கிருதயுகம் என்ற பெயர் வந்தது. பரத க்ஷேத்திரம் போகபூமி என்ற பெயர் விலகி கர்மபூமி என்று பெயர் பெற்றது. இதனால், பரதன் சக்ரவர்த்தியாவதற்கு முன்பே ஆதிபகவன் இந்த பூமியை பரத க்ஷேத்திரம் என்று அழைத்ததும், பரத க்ஷேத்திரத்தின் இடப் பரப்பிலேயே நாடுகள் உருவாக்கப்பட்டதும் விளங்கும்.
ஜம்புத்வீப ப்ரஞ்ஜப்தி சூத்திரம்
சுவேதாம்பர உபாங்கமாகிய ஜம்புத்வீப ப்ரஞ்ஜப்தியில் பகவான் மகாவீரரை நோக்கி கௌதம கணதரர், ஐயனே, பரத க்ஷேத்திரம் ஏன் “பரத க்ஷேத்திரம்” என அழைக்கப்படுகிறது என வினவுகிறார். அதற்கு பதிலளிக்கும் பகவான், பரத சக்ரவர்த்தியின் திக்விஜயம் மற்றும் அவர் ஆறு கண்டங்களையும் வென்று ஷட்கண்டாதிபதியாக முடிசூட்டியதையும் விளக்கினார். திக்விஜயத்தின் போது பரதனை எதிர்க்கும் மன்னர்களும், வித்யாதர தேவர்களும் சிலர் போரிடாமலும், சிலர் போர் செய்ய ஆரம்பித்த பின்னும், முதலாம் தீர்த்தங்கரரின் மகன் பரதன் என்பான் ஆறு கண்டங்களையும் வென்று ஷட்கண்டாதி-பதியாக முடிசூட்டுவான் என்ற நியதியை உணர்ந்தும் பரதனிடம் அடிபணிவதை பகவான் கூறியுள்ளார்.
பின்னர் ரித்திசாலியும், ஆற்றல் மிக்கவனும், ஒரு பல்யோபம் ஆயுளும் கொண்ட பரதன் என்ற தேவன் இங்கு வாழ்ந்தான் என்பதால் இந்த பூமி பரதவர்ஷம், பரதக்ஷேத்திரம் என்றழைக்கப்படுகின்றது என்று பதிலளித்தார். மேலும், கௌதமரை நோக்கி, கௌதமா, மற்றுமொரு காரணம் என்ன-வென்றால், பரதவர்ஷம், பரதக்ஷேத்திரம் நிரந்தரமானது. அனாதிகாலமாக இருந்துவருகிறது, அது இருந்தது இல்லை என்பதும் எப்போதும் கிடையாது, இருக்காது என்பதும் கிடையாது. அது முக்காலத்திலும் திகழும் என்ற நிலை மாற்றமுடியாதது, அழிக்க முடியாதது, குறைவடையாதது மற்றும் நிலைத்துநிற்பது என்று பகவான் மகாவீரர் அருளினார்.
ஆகவே, ஜம்புத்வீபத்தில் பரத க்ஷேத்திரம் என்றும் பரத வர்ஷம் என்றும் குறிப்பிடப்படும் இந்த நிலப்பரப்பு காலங்களை கடந்து நிற்பது, அதில் உள்ள நாடுகள், மாநிலங்கள் பகவான் ரிஷபதேவரால் உருவாக்கப்பட்டு அதில் வாழும் மக்கள் அவர் வகுத்த பண்பாட்டினை பின்பற்றி வாழும் நெறியினை கொண்டுள்ளார்கள்.
நாம் வாழும் நாடு பாரதம், வாழ்க பாரதம்.
==
Bibliography
1. K.V. Ajitadoss, Sarvarthasiddi , Tamil translation, 2011, Chennai, Acharya Vidyasagar Dharmaprabavana Sangam, p249-251
2. J. Srichandran, Silappadigaram Moolamum Thelivuraiyum, 1988, Chennai, Varthamanan Padippagam, p134
3. J. Srichandran, Manimegalai Moolamum Thelivuraiyum, 1996, Chennai, Varthamanan Padippagam, p40
4. Nemi Bhaskaradas, Soolamani Moolamum Thelivuraiyum, 2002, Chennai, Nallara Padippagam, p169
5. J. Srichandran & A. Manikam, Perungathai Moolamum Thelivuraiyum, 2014, Chennai, Tamil Nilayam, p50
6. Poornachandra Sastri, Yasodhara Kavyam Moolamum Uraiyum, Chennai, 1951, p11
7. J. Srichandran, Sripuranam, 2003, Chennai, Varthamaman Padippagam, II Ed., p135
8. Pravartak Shri Amar Muni, Illustrated Jambudweepa Prajnapti Sutra, 2006, Delhi, Padma Prakashan, Ch-3
This article appeared in the Book titled Bharat Nama, Published by Bhatatiya Jnanapeet, New Delhi June, 2021
M.D. Rajendra Jain
Bharatham
During India’s independence movement, national poet, Subramanya Bharati
wrote to remind its citizens that Bharat is an ancient land and we all are
its children. The land spread between the northern Himalayas and the
southern Kumari sea is Bharat lives in all of us as intrinsic ethos.
This write-up is to throw light on some of the instances in Jain
scriptures and literature wherein naming of this land as Bharat is
discussed.
Arungalacheppu, the Tamil version of Ratnakarandaka-shravakachara, states
that dharma is everlasting and is propounded by Tirthankara. It waxes and
wanes in accordance with the time cycles of Utsarpini and Avasarpini and
is re-established by Tirthankaras. True nature of matters (tatvas)
is seen by omniscient Jinas and passed on to the world through their prime
disciples, Ganadharas. Living (beings), non-living, merit,
de-merit, influx, cessation, shedding, bonding and liberation are nine
tatvas. These are also categorised as six dravyas, viz. living,
non-living, dharma, adharma, space and time. The part of space where these
are found is called loka and the part devoid of them is called aloka.
Madya Loka
Loka-space is further divided into middle world, nether world and upper
world. Jain scriptures describe them elaborately. Middle world,
where we live is explained by Jain acharyas in Tattvartha Sutra,
Jambudvipa Prajnapatti and other scriptures.
In this middle world there are many dvipa with pleasant names such as
Jambudvipa and oceans such as lavana samudra. They are formed in
concentric circules over each other dvipa and samudra and in an
incremental dimension of twice over the previous one. In the centre of
these is Jambudvipa which is round and has a dimension of two lakh
yojanas. As this land is full of jamun (nãval in Tamil) trees, it is
called Jambudvip and in Tamil as Nãvalan-thivu.
Tattvartha Surtra describes Jambudvipa in its sutras (Ch.3,S 9-11):
Tanmadhyemerunabhirvrittoyojanshatasahasraviskambho jambudvipah. (TS
3.9)
In the middle of these (concentric oceans and continents, is Jambudvipva
which is round (like the disc of the sun). In the centre of jambudvipa,
like the navel (in the human body, is situated) mount Meru. Jambudvipa 1
lac yojanas in breadth.
Bharatahaimavataharivideharamyakahairanya-vatairavarsahksetrani. (TS
3.10)
The divisions, kshetras, (of Jambudvipa are seven): Bharata, Haimavata,
Hari, Videha, Ramyaka, Hairanyavata and Airavata.
Tadvibhajinahpurvaparayata himavanmahahimavannisidhanilarukmishikharino
varsadharaparvatah. (TS 3.11)
Dividing these 7 kshetras are 6 mountains. (They are: Himavan, Maha
Himavan, Nisidha, Nila, Rukmi and Shikari. These mountains run East to
West.
Navalanthivu (Jambudvip) and Bharat in Tamil literature
Jain monk Elango writes in his Tamil classic Silappadigaram, Aichiyar
Kuravai chapter, “kayalezuthiya imaya netriyin ayalezuthiya puliyum villum navalan
than pozil mannar eval ketpap paar arasanda malai venkudaip
pandian”
- to declare the victories of Pandia king from the Himalayas to Cape
Comerin.
In Manimekalai (Buddhist litt.) the benign rule of Cholas of Bharat is
praised thus,
“padalsal sirappin Bharatathu ongiya, kodacchengol cholar tham
kulakkodi”.
Poet Kongvelir in his Perungathai (Jain litt.) writes that the couple
were blessed to live forever like Meru and Naval (Meru & Jambudvip) -
(Part 2, Poem 3)
“Meru malaiyum navalum pol vazga”.
Yasodhara Kavyam (Jain litt.) in the first part, while describing
country’s riches states that Bharat is in the south of Jambudvip -
“paimpon navar pozi- bharatathidai”
Bharatnama
In Vedic purana while refering to Rishabdev, reason for naming Bharat is also mentioned.
Vishnupurana: Of the hundred sons of Rishabadeva, Bharata was the first
one. From his time this land is called Bharatam.
Bhagavata Purana: Bhagavan Rishabadeva gave the throne to his eldest son
Bharata, who was well versed in dharama, had devotion towards ascetics and
who himself was an example for bhakti and asceticism.
Hence the other legend that Bharat is named after the son of Dushyanta
and Sakuntala is contradictory to these puranas.
Sri Puranam
Sripuranam is an epic about 24 Thirthankaras andis the Tamil version of
Mahapuran written by Acharyas Jinasena and Gunabhadra. Wherein it is
described that when this world from being a bhoga bhoomi turned into karma
bhoomi, people were afflicted by hunger because the plants and crops that
were perennial stopped yielding. Nabhiraja, the first Tirthankara, Adinath
Rishabadev, by his avadhi jnan found ways to mitigate their misery and
also decided to create in Bharata kshetra villages, dwellings, six types
of work, etc. as in Videha kshetra.
On learning Rishabadeva’s desire, Devendra constructed palaces, towers,
ramparts, moats, etc. and beautified Ayodhya. Also created countries viz.
kosalam, avandhi, poundarigam, asumagam, ramyagam, guru, kasi, kalingam,
angam, vangam, singam, samudrigam, kashmiragam, usinaram, aanartham,
vatsam, panchalam, malavam, dasarnam, kaccham, magadam, vidarpam,
gurujangalam, karahadam, maharashtram, surashtram, aabiram, konganam,
vanavasi, andhram, karnatakam, cholam, pandyam, keralam, darvapsaram,
videgam, sindu, kandharam, yavanam, sethi, pallavam, cambojam, arattam,
baguligam, thurushkam, sagam, kekeyam, etc. out of the lands of Ayodhya.
Forests were created around these countries for the dwellings of tribes.
Rishabadev also taught the people livelihood through Asi (swordsmanship
for protection), Masi (writing skills), Krishi (agriculture), Vidya
(knowledge), Vanijya (trade and commerce) and Shilp (crafts). He also
established types of personal relationships, systems of marriages, etc. As
these orders were created by Bagawan, the period came to be known as krita
yuga. Bharata kshetra ceased to be bhog bhoomi and became karma
bhoomi. Thus, it can be seen that even before Bharata became a
chakravarti, Bagawan Rishabadeva called this land Bharata kshetra and
created countries out of its land.
Jambudvipa Prajnapti Sutra
In shwetambar upanga Jambudvipa Prajnapti Sutra, it is stated that Gautam
Swamy asked Mahavira Bhagawan, the reason for this land being called as
Bharata kshetra. In reply Bhagawan narrated Bharat chakravarti’s conquest
of all the six khandas. Bhagawan also described the manner in which his
campaign was carried out. Some of the kings and vidyadharas fought,
some did not, some gave up after starting the war, some bowed down by
realising that as per legend, Bharata the son of first Tirthankara will
conquer the six continents. Bhagwan stated that a ruler by name Bharata,
endowed with riddhis, virya and ayu of one palyopama lived in this land
and hence it came to be called as Bharatvarsh and Bharata kshetra.
Bhagwan Mahavir also stated that Bharat kshetra is permanent, is there from
time immemorial, there was no time when it did not exist. It will be there
in past, present and future.
Thus, this land in Jambudvipa called Bharata kshetra and as Bharatvarsh is
timeless and all the countries and states in it were created by Adinath
Bhagawan Rishabdev. The culture and ethos prevalent in this land are his
legacies.
The land we live in is Bharat, Jai Bharath.
(Tamil version of this article appeared in the book titled "Bharatnama" edited by Dr. Prabhakiran Jain, assisted by Shri Shailendra Jain, Shri Chandramohan Shah and Shri Samyam Jain, Bharatiya Jnanpeet, New Delhi, 2021).
Bibliography
1. K.V. Ajitadoss, Sarvarthasiddi , Tamil translation, 2011, Chennai,
Acharya Vidyasagar Dharmaprabavana Sangam, p249-251
2. J. Srichandran, Silappadigaram Moolamum Thelivuraiyum, 1988, Chennai,
Varthamanan Padippagam, p134
3. J. Srichandran, Manimegalai Moolamum Thelivuraiyum, 1996, Chennai,
Varthamanan Padippagam, p40
4. Nemi Bhaskaradas, Soolamani Moolamum Thelivuraiyum, 2002, Chennai,
Nallara Padippagam, p169
5. J. Srichandran & A. Manikam, Perungathai Moolamum Thelivuraiyum,
2014, Chennai, Tamil Nilayam, p50
6. Poornachandra Sastri, Yasodhara Kavyam Moolamum Uraiyum, Chennai, 1951,
p11
7. J. Srichandran, Sripuranam, 2003, Chennai, Varthamaman Padippagam, II
Ed., p135
8. Pravartak Shri Amar Muni, Illustrated Jambudweepa Prajnapti Sutra, 2006,
Delhi, Padma Prakashan, Ch-3